கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி இரவு முதல் கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசில் ஒப்படைக்க வேண்டும்… பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அருவியின் நீர் அளவை பொறுத்து குளிப்பதற்கான தடை நீக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் குளிக்க தடை விதித்ததால் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிய நெல்லை, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிக்கிறது… கவலை தெரிவிக்கும் பி.ஆர்.பாண்டியன் !!
இதுக்குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவி பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து குறையும் வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.