தமிழகம் முழுவதும் கொட்டிதீர்க்கும் மழை.. சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

By Thanalakshmi V  |  First Published Nov 4, 2022, 11:21 AM IST

மேற்கு தொடச்சி மழையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 


வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதன்படி இன்று மயிலாடுதுறை, நாகை‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்‌ ஆகிய மாவட்டங்களில் கன முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி,  மதுரை, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் படிக்க:வெளுத்து வாங்கும் மழை.. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. கும்பக்கரை அருவில் குளிக்க தடை..

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நீர் வரும் ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து, அருவியில் வெள்ளப்பெருக்கு சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. விடாமல் வெளுத்து வாங்க போகும் மழை..

முன்னதாக தொடர் மழையினால் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

click me!