தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு கோடை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க:விடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. அப்படினா சென்னைக்கு?
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கொடைக்கானல் மற்றும் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் விடாமல் மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பக்தர்களே அலர்ட் !! சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை.. இந்தெந்த நாட்களில் அனுமதி கிடையாது..
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் அப்பகுதிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மழை குறைந்து, அருவியில் நீர்வரத்து சீரான பிறகு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.