கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
undefined
இதையும் படிங்க;- ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்? ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!
இந்நிலையில், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் விட்டுவிட்டு நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஆகையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- 'லவ் டுடே' படம் எப்படி இருக்கு.? திடீரென விமர்சகர் அவதாரம் எடுத்த ஜெயலலிதா மாஜி உதவியாளர்.!