ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

By Raghupati RFirst Published Aug 5, 2022, 6:14 PM IST
Highlights

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உதவியுள்ளார்.

ஆடி மாதம் தொடங்கியது முதல் பல கோவில்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் ஆடிமாத திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..கடுப்பான நீதிமன்றம்.. ஓபிஎஸ் தரப்பை அலறவிட்ட நீதிபதி - ஒருவழியாக மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு !

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல–கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 -ன் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !

click me!