
பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜூன் 11 முதல் 14 வரை சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸில் இருந்து பட்டாபிராம் செல்லும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில், காலை 11.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸில் இருந்து ஆவடி செல்லும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 11,13 ஆகிய தேதிகள் பட்டாபிராம் ரயில் டெப்போவில் இருந்து காலை 11.55 மணிக்கு மூர் மார்கெட் காம்பிளக்ஸ் செல்லும் ரயில் ரத்து
ஜூன் 12-ம் தேதி, காலை 5.40 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு மூர் மார்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் செல்லும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 12-ம் தேதி, காலை 5.40 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் காலை 3.50 மணிக்கு ஆவடியில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 12-ம் தேதி காலை 4.45 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 14 காலை 3.20 மணிக்கு பட்டாபிராமில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 12 காலை 5.30 மணிக்கு பட்டாபிராமில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயில் ரத்து
ஜூன் 14 காலை 4 மணிக்கு ஆவடியில் இருந்து, மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் ரயில் ரத்து
ஒடிசா சோகம்.. ரயில் பெட்டிக்கு அடியில் இன்னும் மனித உடல்கள் உள்ளதா? துர்நாற்றத்திற்கு என்ன காரணம்?
பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் பட்டாபிராம் – மூர் மார்க்கெட் புறநகர் ரயில், ஆவடி வரை மட்டுமே செல்லும்
ஜூன் 14-ம் தேதி, காலை 3.50 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட வேண்டிய ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்
ஜூன் 12, 14-ம் தேதிகளில், காலை 4.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட வேண்டிய ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்
ஜூன் 12-ம் தேதி அரக்கோணம் – வேளச்சேரி புறநகர் ரயில், காலை 4 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து புறப்படும்
12 ரயில்கள் பகுதியாக ரத்து.. மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள் - முழு விபரம் உள்ளே !!