இருவழிப்பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டதால் கோர விபத்து; 11 பேர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Jun 10, 2023, 5:03 PM IST

அரூர் எருமியாம்பட்டி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்தும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அருகம்பேடு, ஜோதிநகர் இரு கிராமங்களில் இருந்து 55 பேர் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூரில் உள்ள ஸ்ரீ முத்துமாலை முருகன் திருக்கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக விடியற்காலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நான்கு வழி சாலையில் டோல்கேட் அமைக்கும் பணிக்காக இருவழி சாலையை ஒரு வழி சாலையாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். ஒரு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுற்றுலா பேருந்தும், ஈச்சர் லாரியும் எருமியம்பட்டி  அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

மது போதையில் பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை வெட்டி கொன்ற குடும்பத்தினர்; காதலி தற்கொலை

இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலமாக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த ஒருவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!