தர்மபுரியில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்; காவல்துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Jun 7, 2023, 6:49 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தர்மபுரி மாவட்டம் கோல்டன் தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் 8-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவருடைய மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வரும் நிலையில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். விடுமுறை நாட்களில் ஹர்ஷா சொந்த ஊருக்கு வந்து திரும்பி ஓசூருக்கு செல்லும் பொழுது உறவுக்கார சகோதரருடன் அனுப்பி வைப்பது வழக்கம். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று சொந்த ஊருக்கு வந்து திரும்பி செல்லும் பொழுது அவருடைய சகோதரருடன் பெற்றோர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்பு அதியமான் கோட்டை அடுத்த நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் ஹர்ஷா மர்மமான முறையில் துப்பட்டாவால் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.

Tap to resize

Latest Videos

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்னும் பல ரயில் விபத்துகளுக்கு வாய்ப்பு - எச்.ராஜா எச்சரிக்கை

தகவல் அறிந்த காவல்துறையினர் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மமான முறையில் நரசிங்கபுரம் வனப்பகுதியில் துணியால் கழுத்தை இறக்கி கொலை செய்து உடலைவீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலை கண்டித்த பெற்றோர்; மனமுடைந்த சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

click me!