12 ரயில்கள் பகுதியாக ரத்து.. மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள் - முழு விபரம் உள்ளே !!

By Raghupati RFirst Published Jun 10, 2023, 5:12 PM IST
Highlights

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் 12 ரயில்கள் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்கிறது.

விருதுநகர் மாவட்டம் கடம்பூர் யார்டு பகுதியில் நடிபெறும் சுரங்கப்பாதை பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  நாளை காலை 6 மனி முதல் மாலை 5 மணி வரை சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.

மேலும், 12 ரயில்கள் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவை பின்வருமாறு, ஈரோடு - நெல்லை செல்லக்கூடிய விரைவு ரயில் (16845) நாளை மறுநால் திண்டுக்கல் - நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லை - ஈரோடு செல்லக்கூடிய விரைவு ரயில் (16846) ஜூன் 13ல் நெல்லை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

கோவை - நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரயில் (16322) ஜூன் 13ல் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.  நாகர்கோவில் சந்திப்பு  - கோவை செல்லக்கூடிய விரைவு ரயில் (16321) 13ல் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

பாலக்கோடு சந்திப்பு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731)ஜூன் 13ல் திண்டுக்கல்  - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்செந்தூர் - பாலக்காடு சந்திப்பு விரைவு ரயில் (16732) ஜூன் 13ல் திருச்செந்தூர் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.

திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (22627) ஜூன் 13ல் விருதுநகர் - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  திருவனந்தபுரம்  - திருச்சி விரைவு ரயில் (22628) விரைவு ரயில் ஜூன் 13ல் திருவனந்தபுரம் விருதுநகர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

மைசூர் - தூத்துக்குடி செல்லக்கூடிய விரைவு ரயில் (16236) நாளை மறுநாள் விருதுநகர் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி - மைசூர் செல்லக்கூடிய விரைவு ரயில் (16235) ஜூன் 13ல்  தூத்துக்குடி - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..44 நிமிடத்தில் சார்ஜ்.! 5 வருடத்துக்கு அப்டேட்.! ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Oppo F23 5G எப்படி இருக்கு?

தாம்பரம் - நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரயில் (26691) நாளை மறுநாள் திருச்சி -  நாகர்கோவில் சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் ரயில் சேவை பாதையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி , குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (16128) 12ம் தேதி நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியே எழும்பூர் செல்லும். 

அதேபோல, கோா்பா (சத்தீஸ்கா்) - கொச்சுவேலி அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22647), சனிக்கிழமையும் (ஜூன் 10), தன்பாத் (ஜாா்கண்ட்) -அலப்பி விரைவு ரயில் (வண்டி எண்: 13351) சனி மற்றும் திங்கள்கிழமையும் (ஜூன் 10, 12) சென்னை சென்ட்ரல் வழியாக செல்வதற்கு பதிலாக கொருக்குபேட்டை, வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை, எழும்பூா் வழியாக இயக்கப்படும்.

இந்தூரிலிருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 22645) திங்கள்கிழமை (ஜூன் 12) சென்னை சென்ட்ரல் வழியாக செல்வதற்கு பதிலாக வியாசா்பாடி, வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை, எழும்பூா் வழியாக இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

click me!