மீண்டும் குளத்துக்குள் ரிடர்ன் ஆகும் அத்திவரதர் ! 17 ஆம் தேதிக்குப் பிறகு தரிசனத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை !!

By Selvanayagam PFirst Published Aug 12, 2019, 10:10 PM IST
Highlights

கஸ்ட் 17ஆம் தேதி திட்டமிட்டபடி காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர்  வைக்கப்படுவார் என்றும் அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படும் என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் உலவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கேட்டுகொண்டார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் பொது மக்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருக்கிறார். இன்று 43ஆவது நாளாக அத்திவரதர் எழுந்தருளியுள்ளார்.

இன்னும் சில தினங்களே அதாவது 16 ஆம் தேதி வரை மட்டுமே வைபவம் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தடி உள்ளது.  


இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பெருகி வரும் பக்தர்கள் கூட்டத்தை கணக்கில் கொண்டு, நகரைச் சுற்றி 3 இடங்களில் அனைத்துவிதமான வசதிகளுடன் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த அவர், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் சிலை குளத்துக்குள் வைக்கப்படும் என்றார். 

click me!