போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! ஒரே நாளில் 25,000 பேர் பணி ஓய்வு..1.75 லட்சம் பணியிடங்கள் காலி.!

By Raghupati RFirst Published May 31, 2022, 4:53 PM IST
Highlights

TN Govt Jobs : தமிழ்நாடு அரசு வீண் செலவுகளை எப்படி குறைப்பது என்பது குறித்து ஆராய்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

தற்போதைய நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி வயதை உயர்த்திக் கொண்டே சென்றால், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமே என்று கேள்வி எழுந்து வருகிறது. முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். 

ஏற்கனவே மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் உருவாகியுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25,000 பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில் தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர்.

புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 25,000 பணியிடங்கள் காலியாகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படவுள்ளது.

இதையும் படிங்க : ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சென்னைக்கு அதிரடி மாற்றம்.! என்ன காரணம் தெரியுமா ?

இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?

click me!