Modi visits TN : மோடியின் இன்றைய தமிழக பயண திட்டம் என்ன.? கோ பேக் மோடியை மீண்டும் ட்ரெண்ட் செய்யும் திமுக

By Ajmal Khan  |  First Published May 30, 2024, 8:47 AM IST

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டமாக இன்று மாலையோடு பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரண்டு நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார். இதனையடுத்து சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இன்று மாலையோடு பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்ற தேர்தலில் இன்றோடு இறுதிகட்ட பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வருகிற 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி உலகமே எதிர்பார்க்கும் அடுத்த இந்தியாவின் பிரதமர் யார் என்கிற முடிவு வெளியாகவுள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இறுதிகட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி முடித்து விட்டு இன்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு மாலை 4.35 மணிக்கு வரவுள்ளார்.

Latest Videos

தியானத்தை தொடங்கும் மோடி

தொடர்ந்து குமரி வரும் பிரதமர் மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்கிறார். தொடர்ந்து கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் மோடி தனது தியானத்தின் மூலம் இறுதி கட்ட தேர்தலில் வாக்குகளை கவர திட்டமிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entire Political Science மாணவர் மட்டும்தான் காந்தியை சினிமா பார்த்து தெரிஞ்சுக்கணும்: ராகுல் காந்தி

எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக

ஆனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் தியானத்திற்கு எந்தவித தடையும் தற்போது வரை விதிக்கவில்லை. இதனிடையே சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

“ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா?” என போஸ்டருக்கு தலைப்பிட்டு Hello Netizens… Ready Start 1 2 3 #GoBackModi என Twitter Trending-க்கு அழைப்புவிடும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே…! எனவும் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில்... கிடு, கிடுவென சரிந்த செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு.! குடிநீருக்கு சிக்கல் ஏற்படுமா.?

 

click me!