
Application invited for Tamil manuscript diploma| தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது இதன் மற்றொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயலாற்றி வருகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பல அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2013இல் தொடங்கப்பட்டது.
தற்போது, தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் 10 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வீதம் உதவித் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டயப் படிப்பில் சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு வயது வரம்பு இல்லை. சேர்க்கைக் கட்டணம் ரூ.3200 (அடையாள அட்டை உள்பட) ஆகும். மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். அதாவது திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பகல் 2 மணி முதல் 4.15 மணி வரை வகுப்பு நடைபெறும்.
லாஸ்ட் சான்ஸ்.! மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க.!அரசு முக்கிய அறிவிப்பு
தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பில் சேர விரும்புவோர், https://ulakaththamizh.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 07.04.2025 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதை தொடர்ன்டு, 11.04.2025 அன்று எழுத்துத் தேர்வு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கல்வி கட்டணம் செலுத்தியதிற்கான வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து அனுப்ப விண்ணப்பிக்க வேண்டும்.
ஆய்வேடு காலம் 3 மாதங்கள் ஆகும். அதன் பின்னும் ஆய்வேடு சமர்ப்பிக்கப்படவில்லை எனில் பட்டயப் பதிவு நீக்கம் செய்யப்படும். பட்டயப் படிப்பு சான்று வழங்குவதற்கான நிபந்தனைகள், வருகைப்பதிவு 75% இருத்தல் வேண்டும். முறையான வருகைப்பதிவு இல்லாதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. உதவித்தொகை பெறவும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். மத்திய / மாநில அரசுகளின் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, இப்பட்டய வகுப்புக்காக வழங்கப்படும் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
மேலும் விவரங்கள் அறிய இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். அத்துடன், 044-2254 2992 என்ற தொலைபேசி எண், 96000 21709 கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.