திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்.! புதிய அறிவிப்புகள் தயார்- எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

Published : Mar 13, 2025, 11:04 AM ISTUpdated : Mar 13, 2025, 11:08 AM IST
திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்.! புதிய அறிவிப்புகள் தயார்- எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்

சுருக்கம்

தமிழக அரசின் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு, ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Budget 2025 : தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது திமுக, இதனையடுத்து 4 பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், தனது கடைசி முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவுள்ளது. இதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யமுடியும். இந்த நிலையில் தமிழ்நாடு 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் 4.12 லட்சம் கோடிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் நிதி தாக்கல்

கடந்த பட்ஜெட்டில் கல்விதுறைக்கு 52 ஆயிரம் கோடி, நகர்புற வளர்ச்சி துறைக்கு 41 ஆயிரம் கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு 27 ஆயிரம் கோடி, எரிசக்தி துறைக்கு 21 ஆயிரம், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். மேலும் முதல்முறையாக மாநில நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு.

Budget:நாளை தமிழக பட்ஜெட்! மக்களுக்கு குஷி அறிவிப்பு... மாநகராட்சி சூப்பர் திட்டம்!

மகளிர் உதவி தொகை

தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 2000ரூபாயாக அதிகரிப்பது. யனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு, கடும் கட்டுப்பாடுகள் தளர்வு போன்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயும்  பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் கிடைக்குமா.?

அதன் படி அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு குழு அமைத்துள்ள நிலையில், சரண் விடுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் தமிழ் புதல்வன்,வட சென்னை வளர்ச்சி திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்தாண்டும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மட்டும் கடந்த நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழக பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்பு என்ன.? தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றுமா.?

நிதி இல்லாமல் திணறும் தமிழக அரசு

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியானது உரிய முறையில் கிடைக்காமல் உள்ளது. வெள்ள பேரிடர், கல்வி திட்டங்கள், ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே  புதிய திட்டங்களை அறிவிப்பதில் அரசுக்கு மிகப் பெரிய சவால் உள்ளது. இருப்பினும் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?
புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!