எனது மகன்களின் பெயர் என்ன தெரியுமா.? என்ன படித்தார்கள் தெரியுமா.? அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி

Published : Mar 13, 2025, 07:14 AM IST
எனது மகன்களின் பெயர் என்ன தெரியுமா.? என்ன படித்தார்கள் தெரியுமா.? அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி

சுருக்கம்

மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால் திமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலையின் கேள்விக்கு பிடிஆர், இருமொழி கொள்கையே தொடரும் என பதிலடி கொடுத்துள்ளார்.

Trilingual policy : தமிழகத்தில் மும்மொழி கொள்கையை செயல்படுத்தாத காரணத்தால் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் கல்வி திட்டங்களுக்கு செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் இந்திய குடிமகனா? மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளச் சொன்னால் அறிவிருக்கிறதா என்று கேட்கிறார்.

அறிவுள்ள யாரும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டார்கள்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

பிடிஆர் மகன்கள் என்ன படிக்கிறார்கள்.?

அப்படியானால் மூன்று மொழிகளை அவரது மகனை படிக்க வைக்கிறாரே அவரை நோக்கி தானே அந்த கேள்வியை கேட்க வேண்டும் என அண்ணாமலை விமர்சித்தார்.  இதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிடிஆர், இந்திரா காந்தி ஆட்சியில் தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது, பிறகு திருந்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. NEP 2020, எந்தவித சட்ட மசோதாவுக்கு நிறைவேற்றாமல், விருப்ப மசோதாவாக கொண்டு வந்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து அடாவடி செய்கின்றனர்.

உ.பியில் ஒரு மொழி கூட நிறைவேற்ற முடியவில்லை

உத்திர பிரதேசத்தில் கூட ஒருமொழி கொள்கையை கூட நிறைவேற்ற முடியாமல்  பிஎம் ஸ்ரீ நிதியை நிறுத்தி வைத்துவிட்டு தெருவில் ரவுடி பேசுவது போல் பேசி வருகின்றனர். இந்த பிரச்சனை LKG மாணவன், உயர்கல்வி பயின்ற மாணவனுக்கு பாடம் கற்பிப்பது போன்று உள்ளது என விமர்சித்தார். புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்துவது இன்றைக்கு சாத்தியமே இல்லை, அதற்கான நிதி உட்கட்டமைப்பு என்பது இல்லையெனவும் கூறினார். அனைவருக்கும் ஒரே கல்வியை கிடைக்கவேண்டும் என்ற முடிவால் கல்வியில் தமிழ்நாடு சிறந்து காணப்படுக்குறது. ஆனால் அதைவிடுத்து 34 அமைச்சர்கள் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகின்றார்கள்,

மும்மொழிக் கொள்கை! தமிழக அரசின் பக்கம்தான் நியாயம்! ஆனால்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்!

எனது மகன்கள் பெயர் என்ன தெரியுமா.?

விருப்பம் உள்ளவர்கள் தனியாக கூடுதல் வகுப்பு சென்று படிக்கட்டும். தொடர்ந்து பேசிய அவர், பாஜக பிரதிநிதி ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார், எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன் அவர்கள் LKG முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழி கொள்கையில் தான் பயின்று வந்துள்ளார்கள் என தெரிவித்தார்.  எதாவது ஒரு இடத்தில் மும்மொழி கொள்கையில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிய பிறகு நாங்கள் விவாதத்திற்கு வருகிறோம், அதுவரை இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கும் என பிடிஆர் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!