Annamalai vs ADMK: அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் ராஜினாமா! அண்ணாமலை உறுதி!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் ராஜினாமா செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக கூறியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.


BJP Annamalai vs ADMK: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கணக்குகளை தொடங்கி விட்டன. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை 

Latest Videos

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும், சீட் பகிர்வு குறித்தும் இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அண்ணாமலையிடம் அமித்ஷா உறுதிப்படுத்தியதாகவும், தமிழக அரசியல் கள நிலவரம், பாஜக நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் அண்ணாமலை சொன்னதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், டெல்லி பயணம் குறித்து அண்னாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக தலைமை முடிவு செய்யும். கூட்டணி குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதியான முடிவாகும். கூட்டணி குறித்து எனது தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. பாஜகவின் வளர்ச்சி தான் முக்கியம்'' என்றார்.

இன்னொரு கட்சியை அழித்துதான் பாஜக வளரணும் அவசியமில்லை! ஒரே போடு போட்ட அண்ணாமலை!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணியில் அதிமுக இருந்த நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவால் தான் அதிமுக தோற்றது என அக்கட்சியின் பல்வேறு தலைவர்கள் கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த அண்ணாமலை அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார். இதன்பிறகு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது.

அதன்பிறகு கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அண்ணாமலை, ''அதிமுகவுடன் இனிமேல் ஒருபோதும் கூட்டணி கிடையாது. அப்படி கூட்டணி அமைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. மாற்றி மாற்றி பேசுகிற அரசியல்வாதி நான் இல்லை'' என்று தெரிவித்தார்.

பாஜக வலுவாக காலுன்ற வேண்டும் என விரும்பும் அண்ணாமலை

அதாவது தமிழ்நாட்டில் பாஜக வலுவாக காலுன்ற வேண்டும் என விரும்பும் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை எனவும் ஆனால் பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி என திட்டவட்டமாக கூறி விட்டதாவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை என்றாலும் பாஜக தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட சூழ்நிலையில் அவர் இருக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தான் பாஜக தலைவராக தொடர மாட்டேன் என அமித்ஷாவிடம் அண்ணாமலை சொல்லி விட்டதாகவும் அவரை மத்திய அமைச்சராக்கி தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல தயாரா? இபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு கேள்வி!

click me!