பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அதிமுக கூட்டணி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பிரதமர் மோடி ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் வரவுள்ளார். அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மதுரை வழியாகத் திரும்புவார். தேர்தலுக்குப் பின் பிரதமரின் முதல் தமிழக பயணம் இதுவாகும். மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறினால் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது. அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்து உரிமையும் உண்டு. அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்திருப்பதில் தவறு இல்லை. கூட்டணி குறித்த விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்தே இறுதிக்கருத்து.
இதையும் படிங்க: வசமாக சிக்கிய மிதுன்! அமித் ஷாவிடம் இபிஎஸ் சரண்டராக இதுதான் காரணம்! அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்!
செங்கோட்டையன் பயணம் குறித்து யூகங்கள் எழுதப்படுகின்றன. திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது. அதிமுக உட்கட்சியை விவகாரத்தில் தலையிட வேண்டிய் அவசியம் பாஜகவுக்கு இல்லை. இன்னொரு கட்சியை அழித்துதான் வளர வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் பாஜகவுக்கு இல்லை.
இதையும் படிங்க: அமித்ஷா சொன்ன பொய்! அம்பலப்படுத்திய திமுக! நடந்தது என்ன?
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு குறைகிறது. கருத்துக்கணிப்பில் கூட முதல்வர் ஸ்டாலின் முதன்மை பெறவில்லை. மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. ஒரு மாநிலத்தில் மோசமான முதல்வராக இருந்தாலும் 40-43% ஆதரவு இருக்கும். ஆனால் இவருக்கு 25% தான். விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன். டெல்லியில் பேசும்போது தொண்டனாக பணியாற்றவும் தயார் எனக்கூறியுள்ளேன். அதன் பொருளையும் உணர்ந்து கொள்ளுங்கள். அண்ணாமலை அரசியலுக்கு வந்தது அதிகாரத்திற்கு கிடையாது. விஜய்க்கு பாதுகாப்பு அளித்ததால், அவரது கட்சியுடன் உறவு கிடையாது. மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறும்போது, மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.