தமிழ்நாடு அரசு, தாட்கோ மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தொழிற்பேட்டைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க வாய்ப்பளிக்கிறது. வாடகை மற்றும் குத்தகை முறையில் தொழிற்கூடங்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம்.
Tiruppur and Erode industrial parks : தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைத் திட்டமிடுதல், மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் என்ற நோக்கத்துடன், தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. தொழிற்பேட்டை என்பது, பல தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒரே இடத்தில் செயல்படும் ஒரு சிறப்புப் பகுதியாகும். இது தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு இடமாகு உள்ளது. இந்த நிலையில் தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில், தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடி கிப்லி படங்களை உருவாக்குவது காப்புரிமை மீறலா?
தொழிற்பேட்டை- தொழில் தொடங்க அழைப்பு
இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் படி, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்க அரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் மிகவும் பணக்காரர்கள் யார்? டாப் 10 பட்டியல் இதோ!
குத்தகை - வாடகைக்கு ஒப்பந்தம்
இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலிமனையாகவோ, மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாகவோ, ஒற்றைமாடி /பலமாடி தொழிற்கூடங்களாவோ அமைத்து அவர்களின் தேவைக்கேற்ப குறுகிய/நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க அரசு தற்போது முன் வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04-04-2025 காலை 10 மணியளவில் ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு +91 91502 77723 என்ற தொலைப்பேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.