முதல்வர் கனவில் அண்ணாமலை... தண்ணி தெளிச்சு விடுங்க... பங்கமாகக் கலாய்த்த எஸ்.வி.சேகர்

By SG Balan  |  First Published Nov 19, 2023, 11:13 PM IST

மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்; ஆனால் அண்ணாமலை தலைமை இருக்கும் வரை ஒரு சீட் கூட கிடைக்காது என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி கடுமையாக குறைகூறிவரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீண்டும் அண்ணாமலை வறுத்தெடுத்திருக்கிறார். அண்ணாமலை  அண்ணாமலை முதல்வர் கனவில் இருப்பதாகவும் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளித்தால் அவரது கனவு போய்விடும் என்றும் கிண்டல் அடித்திருக்கிறார்.

சென்னை மயிலாப்பூரில் நடந்த 'தமிழகத்தில் பிராமணர்களின் எதிர்காலம்' என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது எஸ்.வி.சேகர் இவ்வாறு பேசியுள்ளார்.

Tap to resize

Latest Videos

அண்ணாமலையின் அரசியல் பூஜ்ஜியத்திற்கு வழிகாட்டக்கூடியது என்று சாடிய எஸ்.வி.சேகர், மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்; ஆனால் அண்ணாமலை தலைமை இருக்கும் வரை ஒரு சீட் கூட கிடைக்காது என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். 2024 அல்லது 2026 தேர்தலுக்குப் பின் அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்து தூக்கி வீசப்படுவார் என்றும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டார்.

கையைச் சுடும் ஐபோன் 15! ஹீட்டிங் பிரச்சினையை சரிசெய்யப் போராடும் ஆப்பிள் நிறுவனம்!

தான் மோடி அழைத்து பாஜகவில் உறுப்பினராகச் சேர்ந்திருப்பதாகவும் அண்ணாமலை தலைமையில் நடக்கும் எந்தச் செயலிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். 

"அவர் (அண்ணாமலை) பிராமணர்களுக்கு எதிரானவராக இருக்கிறார். பிராமணர்களைப் பிடிக்காத அவரை எனக்குப் பிடிக்காது" எனக் கூறினார். அவர் பாஜகவில் பிராமணர்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார் என்றும் எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டினார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரையை விமர்சித்துப் பேசிய எஸ்.வி.சேகர், "நமக்காகக் கூட்டம் வருவது வேறு, நடைபயணம் மாதிரி கூட்டம் இருக்கும் இடத்திற்குப் போய் நின்றுகொண்டு செல்போனில் ஒரு போட்டு எடுப்பது வேறு... தினமும் 2 மணிநேரம் நடைப்பது நடைபயணமா?" என்றார்.

"ஜாதிகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். பிராமணர்கள் 3 சதவீதம் இருக்கிறார்கள். இந்த பிராமணர்களுக்கு சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் 7 பிரதிநிதிகள் வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பிய எஸ்.வி.சேகர் அரசியல் அங்கீகாரம் இல்லாத வரைக்கும் எந்த ஜாதிக்கும் மரியாதை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற அனுமதியுடன் தமிழகம் முழுவதும் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு

click me!