பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வேல்முருகன் எச்சரித்துள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பு செய்வதை உடனடியாக மாற்றியமைக்கவில்லை எனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அக்கட்சியில் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கட்சித் தலைவர் வேல்முருகன் உரையாற்றினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், பொழுதுபோக்கிற்காக துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது படுக்கை அறை காட்சிகளையும், ஆபாச காட்சிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதனை விஜய் டிவி உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
நள்ளிரவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மடக்கி பொதுமக்கள் வைத்த கோரிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது ஒப்புதல் அளிக்காத ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற அவர், தமிழகத்தில் ஆளுநர் ரவி பேரலல் அரசை நடத்தி வருவதாகவும், தமிழ்நாட்டின் ஆளுநராக ஒரு நிமிடம் கூட இருக்க அவருக்கு தகுதி இல்லை எனவும் சாடினார். மேலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை மாநில அரசுகளை மிரட்டவே மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் வேல்முருகன் குற்றம் சாட்டினார்.