திமுகவினருக்கு கப்பம் கட்டினால் மட்டுமே தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி.! விளாசும் அண்ணாமலை

Published : May 23, 2025, 08:02 PM ISTUpdated : May 23, 2025, 08:07 PM IST
Tamil Nadu CM MK Stalin and state BJP president K Annamalai (File Photo/ANI)

சுருக்கம்

திமுக வட்ட செயலாளர் மீது மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும், குவாரி உரிமையாளரிடமிருந்து ₹75 லட்சம் வசூலித்ததாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அண்ணாமலை விமர்சனம் : தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் மீதான புகார்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ₹3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். 

குவாரி உரிமையாளர்களிடம் திமுகவினர் வசூல்

திமுகவினரின் தொடரும் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த நான்கு வருடங்களில், ₹75 லட்சம் வரை, குவாரி உரிமையாளரிடமிருந்து இந்த திமுக வட்ட செயலாளர் வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. திமுகவினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது.

விசாரணை வலையத்தில் இருந்து ஊழல்வாதிகளைக் காப்பாற்ற, மக்கள் வரிப்பணத்தில் உச்சநீதிமன்றம் வரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது கட்சிக்காரர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இருண்ட காலத்தில் தமிழகம்

 அனைத்துத் துறைகளிலும் ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, திமுக குறுநில மன்னர்களின் கட்டாய வசூல், யாருக்குமே பாதுகாப்பில்லாத சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, இருண்ட காலத்தில் தமிழகம் தள்ளாடுகிறது. ஆனால், இவை குறித்து எந்தக் கவலையும் இன்றி, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!