இன்று முதல்வர் டெல்லி போனது தமிழக மக்களுக்காக அல்ல! தமிழிசை சொன்ன அதிர்ச்சி தகவல்!

Published : May 23, 2025, 07:56 PM IST
tamilisai soundararajan

சுருக்கம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது மக்களுக்காக அல்ல, கூட்டணி பலவீனத்தை சரிசெய்யவே என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழிசை விமர்சனம்

தங்களின் அரசியல் லாபத்திற்காக இதற்கு முன்னால் இந்த கூட்டத்திற்கு செல்லாததினால் தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கே அழுத்தமாகவே நான் பதிவிடுகிறேன் என தமிழிசை கூறியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்... ஏன்? மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்கள்.. திட்டக் கமிஷனாக இருந்ததை நிதி ஆயோக் யாக மாற்றியது... மத்திய மாநில அரசுகளின் விவாதங்கள் இருக்க வேண்டும் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும்தான்.

தமிழக மக்கள் உணர வேண்டும்

ஆக நிதி ஆயோக்கின் அடிப்படைத் தன்மையே மாநில அரசுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அமைப்பு அதுமட்டுமல்ல இந்த நிதி ஆயோக் கூட்டத்தின் மூலம் மாநில அரசுகள் 2047க்குள் தங்கள் மாநிலத்தை முதன்மை மாநிலங்களாக மாற்றுவதற்கு என்னென்ன அடிப்படை கட்டமைப்பு தேவையோ அதற்கான ரோடு மேப்பை கொடுத்தால்.. நிதி பகிர்வு ஆலோசிக்கப்படும் என்பதும் இந்த கூட்டத்தின் ஒரு அங்கம்.. ஆக ஸ்டாலின் அரசு நமது மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணித்து இருக்கிறது இன்று மாநிலத்தில் உள்ள பல நிதி பிரச்சனைகளுக்கு காரணம் ஜனநாயகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதி பகிர்வு அமைப்பிற்கு தமிழக முதலமைச்சர் செல்லாததுதான் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

துரோகம் இழைக்கும் திமுக

தங்களின் அரசியல் லாபத்திற்காக இதற்கு முன்னால் இந்த கூட்டத்திற்கு செல்லாததினால் தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கே அழுத்தமாகவே நான் பதிவிடுகிறேன். ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்சி வேறு ஆட்சி வேறு என்ற வேறுபாடு இல்லாமல் ஆட்சிக்குள் கட்சியை புகுத்தி தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது திராவிட முன்னேற்ற கழக அரசு. இதற்கு முன்னால் நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு எல்லாம் சரியாக சென்று கலந்திருந்தார்கள் என்றால் தமிழகத்தின் பெரும்பான்மையான பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப் பட்டிருக்கும்.

தமிழக மக்களுக்காக டெல்லி செல்லவில்லை

இன்னொரு மாநிலத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்குவதற்காக எதிர்ப்பு தெரிவித்து நான் புறக்கணிக்கிறேன் என்று சென்ற முறை முதலமைச்சர் சொன்னார் இன்னொரு மாநிலத்திற்கு அதிகமாக கொடுப்பதற்கு புறக்கணிக்கிறேன் என்று சொல்வதை விட எனது மாநிலத்திற்கு அதிகமாக கொடுங்கள் என்று தேவையான ஆவணங்களுடன் அந்த அமைப்பிற்கு சென்று வேண்டுவது தானே சரியான அணுகுமுறையாக இருக்கும்.. ஆக இவர்களின் தவறான அணுகுமுறை தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். ஆக இன்று டெல்லி போவது.. மக்களுக்கு பலன் சேர்ப்பதற்காக அல்ல... தங்கள் கூட்டணி பலவீனமாக இருப்பதை அறிந்து அதற்கு பலம் சேர்ப்பது தானே தவிர தமிழக மக்களுக்காக செல்லவில்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!