நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முடிவடைந்துள்ள நிலையில், கேரளாவில் போட்டியிடும் பாஜகவினருக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் தொடங்கியுள்ளார். நேற்று நடைபெற்ற ரோட் ஷாவில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் முடிந்த வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் பாஜக தலைமையில் 39 இடங்களில் போட்டியிட்டது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் தொடங்கிய பிரச்சாரம் இரவு வரை நீடித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்! கண்கொத்தி பாம்பாக இருங்கள்! இபிஎஸ் கொடுத்த அலர்ட்!
கேரளாவில் களம் இறங்கிய அண்ணாமலை
ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் மீண்டும் பிரச்சார களத்திற்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே கடந்த 2023ஆம் ஆண்டு கர்நாடகவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக கர்நாடக முழுவதும் தீவிர களப்பணியாற்றினார். இந்தநிலையில் தற்போது கேரளாவில் பாஜகவிற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். நேற்று மாலை பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு வந்த தமிழக பா.ஜ. க தலைவர் அண்ணாமலைக்கு பாலக்காடு பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட தலைவர் ஹரிதாஸ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரோட் ஷோவில் அண்ணாமலை
இதனையடுத்து கஞ்சிக்கோடு கொய்யாமரக்காடு என்ற இடத்தில் துவங்கிய, 'ரோடு ஷோ'வில் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் 'ரோடு ஷோ'வில் இணைந்தனர். இதனை தொடர்ந்து கேரளா வாக்காளர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு பணி சிறப்பு மிக்கதாகும். சாமானியர்களுக்காக நிறைய விஷயங்களை செய்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை உலகில், 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பாஜக அரசின் திட்டங்களின் பட்டியலையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பா.ஜ.,வை எதிர்த்து போட்டியிடும் 'இண்டியா' கூட்டணிக்கு தலைவர் இல்லை. அவர்கள் ஒரு மாநிலத்தில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டுக்கொள்ளும் நிலையில், ஒற்றுமையாக இருப்பதாக கூறுவதாக விமர்சித்தார்.