Take Home முறையில் தேர்வு... வழிகாட்டுதல்களை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!!

By Narendran SFirst Published Jan 24, 2022, 5:46 PM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அந்த தேர்வுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரியர் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகலுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதன்படி பிஇ, பிடெக் மற்றும் பிஆர்க் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதில், வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 879 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் Take home முறையில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனைகளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதலாம். விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் மேலே குறிப்பிட வேண்டும். ஒரு மணி நேர தேர்வுக்கு பதில்3 மணி நேர தேர்வு நடைபெறும் என்றும் கூகுள் கிளாஸ்ரூம் அல்லது E-Mail மூலம் வினாத்தாள் மாணவர்களுக்கு அனுப்பப்படும். தேர்வு எழுதிய விடைத்தாள்களை அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். நேரில் வந்து தரக்கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

click me!