அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் தவறிவிழுந்த கைக்குழந்தையை மீட்கும் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் தவறி விழுந்த கைக்குழந்தையை அந்த குடியிருப்பு வாசிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மீட்கும் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிம் ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கீழே விழுந்தால் அந்தக் குழந்தையை பிடிப்பதற்காக பல நபர்கள் பெட்ஷீட்டை விரித்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெட்ஷீட்டுக்கு கீழே மெத்தை ஒன்றும் போடப்பட்டுள்ளது. இதனிடையே, அந்த குழந்தையை ஜன்னல் வழியாக சில இளைஞர்கள் போராடி மீட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ரூ.4 கோடி பறிமுதல்: சிபிசிஐடியிடம் ஆவணம் ஒப்படைப்பு
அடுக்குமாடி குடியிருப்ப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பதற வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில், இது தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு எந்த புகார்களும் இதுவரை வரவில்லை என தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் எங்கே நடந்தது என்பதை கண்டுபிடித்த பிறகு குழந்தை தவறி விழுந்தது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.