ஒரு டயருக்கு ரூ.5000 அபராதம்: கேரள போலீசார் மீது தமிழக இளைஞர்கள் காட்டம்!

By Manikanda PrabuFirst Published Apr 28, 2024, 3:41 PM IST
Highlights

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஒரு டயருக்கு ஐந்தாயிரம் அபராதம் வீதம் காரின் நான்கு டயர்களுக்கு கேரளா மாநிலப் போலீசார் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் காரில் தங்களது சொந்த வேலைக்காக கேரளாவிற்கு சென்றுள்ளனர். அப்போது தமிழக கேரளா எல்லையில் கேரளா மாநில மோட்டார் வாகன கண்காணிப்பு துறை போலீசார் தமிழக இளைஞர்கள் சென்ற காரை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர்.

கேரள மாநில மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டிய போலீசார், ட்யர் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் 4 டயர்களுக்கும் சேர்த்து ரூ.20000 அபராதம் விதித்துள்ளனர். இதனால் போலீஸாருக்கும் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தங்கள் வாகனத்தை மட்டும் சோதனை செய்து அபராதம் விதிக்கும் கேரள போலீசார் தங்களுக்கு முன்னாள் சென்ற கேரள மாநில பதிவென் கொண்ட வாகனங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை? எனவும், தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதமா? கேரளா வாகனங்களுக்கு ஏன் அபராதம் இல்லை? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

கஞ்சா மது போதையில் இருசக்கர வாகனம் ஏற்றி இளைஞர் கொலை: கிருஷ்ணகிரியில் கொடூரம்!

இதுதொடர்பாக, இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இதுகுறித்து முதலமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் அளிக்கப் போவதாக இளைஞர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

click me!