
Annauniversity Paliyal Case : அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிரவைத்தது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தனது கல்லூரி நண்பரோடு கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்த மாணவியை மர்ம நபர் ஓருவர் மிரட்டி பாலியல் வன்கொடுயில் ஈடுபடுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியோடும், செல்போன் சிக்னல் மூலமாகவும் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.
கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் ஞானசேகரன் மீது கொள்ளை, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பல தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாலியல் வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக மாணவி புகார் கொடுத்த 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்