
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “சேலம் பணமரத்துப்பட்டி ஏரிக்கு 106 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதுபோன்று பல திட்டங்களை சொல்லலாம்.
இன்னும் நாலு மாதம் தான் இருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள் பிறகு நம் ஆட்சிதான். நீங்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும். மக்கள் தெளிவாக உள்ளனர் வேகமாக முன்னேறி மக்களுக்கான நல்ல திட்டங்களை வகுத்து மக்கள் பிரச்சனைக்காக போராட்டங்கள் செய்து இட ஒதுக்கீடு, சமூக நீதி என்றால் என்ன அதற்கு என்ன செய்ய வேண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு ஒரு ஜாதி பிரச்சினை கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கான பிரச்சினை. இது வன்னியர்களுக்கான பிரச்சினை கிடையாது. அனைத்து சாதியினருக்கான பிரச்சினை தான் இது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் நிறைய திட்டங்கள் அவர்களுக்கு வழங்க முடியும். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை வழங்க முடியும். நீங்கள் அனைவரும் தயார் நிலையில் இருங்கள் என்று கூறினார்.