காவிரி டெல்டாவில் ஒரு பக்கம் வெள்ளம்…மறுபக்கம் காயும் நிலங்கள்… என்ன பண்ணுது இந்த அரசு…. அடித்து துவைத்தெடுத்த அன்புமணி !!

By Selvanayagam PFirst Published Aug 20, 2018, 8:27 AM IST
Highlights

விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் கடலில் வீணாய் தண்ணீர் கலந்து கொண்டிருக்க, டெல்டா மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் இன்னும் காய்ந்து போயிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் அரசு ஒன்று இருக்கிறதா? கால்வாய்களை தூர் வாராமல் செயல்படா அரசாகவே இருந்து வருகிறது என வேதனை தெரிவித்தார்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு கொட்டித் தீர்த்தால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர்  அணை இரண்டு முறை நிரம்பி வழிந்தது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு  கடலில் வீணாக கலக்கிறது.

கடலூர்  மற்றும்  நாகை மாவட்டங்களில்  உள்ள டெல்டா பாசனப் பகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கொள்ளிடம் வெள்ளத்தை நேரில் பார்வையிட்டார். 

வேளக்குடி, பெராம்பட்டு, பழையார், ஆச்சாள்புரம், நாதல்படுகை, முதலைமேடு திட்டு, மாங்கணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளிடத்தில் பெருவெள்ளம் ஓடும் நிலையில் - கடலூர், நாகை மாவட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் அளிக்கப்படவில்லை. ஓடைகள், வாய்க்கால்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் - விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

.

வீராணம் ஏரி தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், வீராணத்தின் 30க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால்களில் இன்னமும் தண்ணீர் திறக்கப்படாமல், விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன என வேதனை தெரிவித்தார்.

கொள்ளிடத்தில் பெருவெள்ளம். அதன் அருகிலேயே நீரின்றி காய்ந்து கிடக்கும் - கடலூர், நாகை மாவட்ட விவசாய நிலங்கள் என்கிற அவலநிலையை திட்டமிட்டு உருவாக்கி வைத்துள்ளனர் தற்போது ஆளும் அரசினர் என தெரிவித்தார்.. 

,ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும், மணல்கொள்ளைக்கும் தாராளமாக ஆதரவு தரும், தமிழக அரசு,  டெல்டா மாவட்டங்கள் அழிந்து போவதுதான் தங்களது கொள்கை என முடிவெடுத்துவிட்டார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.

தற்போது கடலில் காவிரி நீர் வீணாக போய் கலப்பதற்குள் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரி இந்த விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என அனபுமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

click me!