அதிமுகவை தோளில் சுமந்தது போதும்.. ஆட்சியைக் கொடுத்தது போதும்.. வெறுப்பில் இருக்கிறோம்- சீறும் அன்புமணி

By Ajmal Khan  |  First Published Apr 15, 2024, 8:03 AM IST

பாமகவிற்கு  கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் எழில்மலைக்குத்தான் கொடுத்தோம். இரண்டாவது அமைச்சர் பதவியை பொன்னுசாமி என்ற தலித்துக்குத்தான் கொடுத்தோம் என அன்புமணி தெரிவித்துள்ளார். 
 


சாதகமான அலை வீசுகிறது

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக வேட்பாளர் எஸ். முரளிசங்கரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர்,  தமிழகத்தில் மிகப்பெரிய சாதகமான அலை நம் பக்கம் வீசுகிறது. திமுக, அதிமுக வேண்டாம், தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கட்சி, ஜாதி, மதம், இனம் பார்க்காமல் எங்களுக்கு மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள். இத்தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

தோளில் சுமந்தது போதும்

திமுக,அதிமுக நம்மை ஏமாற்றிவிட்டது. இடஒதுக்கீடுத் தருகிறேன் எனக் கூறி இரு கட்சிகளும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். பின்தங்கிய வன்னிய சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிக நன்மை செய்த கட்சி பாமகதான். எங்கள் கட்சிக்கு கிடைத்த முதலில் மத்திய அமைச்சர் பதவியை தலித் எழில்மலைக்குத்தான் கொடுத்தோம். இரண்டாவது அமைச்சர் பதவியை பொன்னுசாமி என்ற தலித்துக்குத்தான் கொடுத்தோம். கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பட்டியலினத்தவருக்குத்தான் என்று கட்சி அதிகாரத்தில் கூறியிருக்கிறோம். பட்டியலின மக்களுக்கு சமூகநீதியை வழங்கும் ஒரே கட்சி பாமகதான் என தெரிவித்தார். 

Annamalai : அடுத்தடுத்து இரண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு..! மீண்டும் அண்ணாமலைக்கு செக் வைத்த கோவை போலீஸ்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தோளில் சுமந்தது போதும். ஆட்சியைக் கொடுத்தது போதும். அதனாலேயே இவர்கள் மீது வெறுப்பில் இருக்கிறோம். உங்களுடன் நாங்கள் கூட்டணிக்கு வந்தபோது நாங்கள் முன்வைத்த 10 கோரிக்கைகளில் வன்னியர் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஆறுகளில் தடுப்பணை அமைப்பது, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது என முக்கியமானது. இதில் என்ன கோரிக்கையை நிறைவேற்றினீர்கள். 2 ஆண்டுகாலமாகத் தராமல் கடைசி நேரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை கொடுத்தீர்கள். திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் இரண்டு பெரிய சமுதாயத்தை பயன்படுத்தி வாக்குக்காக கோஷம் போட்டு, கடைசிவரை அப்படியே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். 

2026ல் பாமக ஆட்சி

இவர்கள் இருவரும் இரண்டு சமுதாயத்தை முன்னேற விடமாட்டார்கள்.ஒருமுறை நீங்கள் மாற்றி வாக்களியுங்கள். 2026இல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சிதான். நீங்கள்யாரும் எங்களுக்கு இடஒதுக்கீடு தர வேண்டாம், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கையெழுத்து போடுவோம். நேர்மையான உழைப்பு, திட்டம், போராடும் குணம் எங்களிடம் உள்ளது. அதனை செய்து உங்களுக்கான திட்டத்தை கொண்டு வருவோம் என அன்புமணி தெரிவித்தார். 

EPS : அதிமுக பிச்சை போட்டதால் தான் மாநிலங்களவை உறுபினராக அன்புமணி ஆகியுள்ளார்.! விளாசும் எடப்பாடி பழனிசாமி

click me!