Anbumani : அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்கனும்.. அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது.! அன்புமணி

By Ajmal Khan  |  First Published Jul 2, 2024, 9:14 AM IST

விக்கிரவாண்டி தேர்தலில் நாம் யாரு என காட்ட வேண்டும். நம் பலத்தை காட்ட வேண்டும் எனவே உங்களுடைய கோபத்தை தேர்தலில் காட்டுங்கள் என அன்புமணி தெரிவித்தார். 


சூடு பிடிக்கும் தேர்தல் களம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்து ஒரு மாத காலத்திற்குள் இடைத்தேர்தலை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்னும் தேர்தலுக்கு ஒரு வார காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், பாமக சார்பாக போட்டியிடுகின்ற சி. அன்புமணி பொது வேட்பாளர், இவர் வெற்றி பெற்றால் நமக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும், ஜாதி வாரிய கணக்கெடுப்பு  நடத்தப்படும், எல்லா சமூதாயத்திற்கும் சமூகநீதி  கிடைக்கும், வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் என கூறினார். 

Tap to resize

Latest Videos

Vegetables : திடீரென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ அவரைக்காய், பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?

அதிமுகவினர் பாமகவிற்கு ஓட்டு போடுங்க..

சி.அன்புமணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் பயந்து நமக்கு இட ஒதுக்கீடு கொடுப்பார். வன்னியர் சமூகம் எதிர்க்க தொடங்கிட்டாங்க, இட ஒதுக்கீடு கொடுக்கனும் என்ற நிர்பந்தம் வரும். எனவே இட ஒதுக்கீடு கிடைக்க மக்களால் முடியும் என தெரிவித்தார். எனவே தைரியமாக போய் வாக்கு சேகரியுங்கள், வீடு வீடாக போங்க, இந்த இடைத்தேர்தலில் அதிமுக தேர்தலில் போட்டியில்லை, எனவே அனைவருக்கும் பொது எதிரி திமுக தான், எனவே அதிமுகவினர் உங்களது வாக்குகளை பாமகவிற்கு போடுங்கள். நிச்சயமாக திமுகவை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும். எனவே அனைவரும் ஒன்று சேர வேண்டும், அதிமுக , தேமுதிக என எந்த கட்சியாக இருந்தாலும் சரி, பாமகவிற்கு வாக்களியுங்கள். தற்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.  

EPS : சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களா.!! இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது- பாஜக அரசுக்கு எதிராக சீறும் எடப்பாடி

வேதனையான ஆட்சி இது

பாமக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி, ஜி.கே.வாசன் பிரச்சாரத்திற்கு வர போறாங்க. உங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார்கள் என கூறினார். தற்போது திமுகவிற்கு சாதனை ஒன்றும் இல்லை, வேதனை தான் உள்ளது. தாழி அறுத்துட்டாங்கள், கள்ளச்சாரயம், ஊழல், லஞ்சம் என ஆட்சி நடக்கிறது.   எனவே இந்த தேர்தலில் நாம் யாரு என காட்ட வேண்டும். நம் பலத்தை காட்ட வேண்டும் எனவே உங்களுடைய கோபத்தை தேர்தலில் காட்டுங்கள் என அன்புமணி தெரிவித்தார். 

click me!