EPS : சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களா.!! இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது- பாஜக அரசுக்கு எதிராக சீறும் எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Jul 2, 2024, 7:51 AM IST

இந்தி திணிப்பாணது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும்  நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 


புதிய குற்றவியல் சட்டம்

150 ஆண்டுகள் வழக்கத்தில் இருந்த குற்றவியல் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் புதிய சட்டத்தை மத்திய அரசு  அமல்படுத்தப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Tap to resize

Latest Videos

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில்  மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட, 

பாசிச பாஜக குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலம்தான் பேசுகிறார்கள்: திமுக. எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு

சமஸ்கிருதம், இந்தி திணிப்பா

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பாணது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும்  நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது, இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Thirumavalavan: பூரண மதுவிலக்கு திமுகவின் எதிர்காலத்திற்கான செல்வாக்கை பெருக்கும்; திருமா அறிவுரை
 

click me!