அனைத்து கல்லூரிகளும் ஜூலை 18-ல் திறப்பு.. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..? வெளியான முக்கிய தகவல்.

By Thanalakshmi VFirst Published Jun 29, 2022, 11:27 AM IST
Highlights

தமிழகத்தில் அனைத்து கலை,அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் அனைத்து கலை,அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 2ஒ ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93.76% பேர் தேர்ச்சி பெற்றிருந்தன. கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைப் பெற்றூ வருகிறது. கடந்த 22 ஆம் தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. மேலும் இணையதள வாயிலாக www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க:உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்..! விண்ணப்பம் பதிவேற்றுவதில் பிரச்சனையால் பாதிப்பு

மேலும் படிக்க:ஜூலை 18ல் கல்லூரிகள் திறப்பு.. முதலாமாண்டு பொறியியல் வகுப்பு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..

இதன் படி, 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் சேர, ஜூலை 7ம் தேதி வரை  www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் தற்போது முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு,  இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 

அரசு கல்லூரிகளில் இதுவரை 2.40 லட்சத்தும் மேற்பட்டோர் விண்ணப்ப பதிவு செய்துள்ளதாகவும் அதில் 1.95 லட்சம் பேர் விண்ணப்பதை சமர்பித்துள்ளதாகவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  சிபிஎஸ்இ யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, மாணவர்கள் விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாள் அவகாசம் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு.. தேர்வு எப்போது..? முழு தகவல்..

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறைக்கு பிறகு, ஜூலை 18 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

click me!