கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது.!

By vinoth kumarFirst Published Jun 29, 2022, 9:19 AM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் பழனிவேல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதையும் படிங்க;- தலைக்கேறிய போதை.. தெளியாத மப்பு.. ஆண் ஒருவரை அடித்து.. ஆபாசமாக பேசி வாண்டடாக வம்பிழுத்த குடிமகள்.!

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தன் கணவர் கனகராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக, மனைவி கலைவாணி புகார் கொடுத்தார்.

இதையும் படிங்க;-  மக்களே உஷார்.! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை !

இதன்பேரில் போலீசார் அந்த வழக்கை 5 தனிப்படைகள் கொண்டு மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இந்நிலையில், கனகராஜ் மனைவி அளித்த புகாரின் பேரில் கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அச்சுறுத்துதல், பெண்களை தாக்குதல், மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பழனிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!