கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் மரணம்…. மதுரை மருத்துவமனயில் உயிரிழந்தார் !!

By Selvanayagam PFirst Published Dec 30, 2018, 9:24 AM IST
Highlights

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் ரத்தம் அளித்த இளைஞர் மதுரையில் உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக மன உளைச்சலில்   எலி மருந்து சாப்பிட்டு பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

 

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், சிவகாசி பட்டாசு ஆலையில் வேலைபார்த்த போது தனது உறவு பெண்ணுக்காக ரத்தம் தானம் செய்துள்ளார். ஆனால் அந்த ரத்தம் அவருக்கு வழங்கபடவில்லை.

இதனிடையே மதுரையில் ரத்த பரிசோதனை செய்த இளைஞர் தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்து உடனே சிவகாசி ரத்த வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு அந்த ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.

 

இது தொடர்பாக ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உட்பட மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணி பெண் பாதிப்புக்குள்ளானது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணயால் மனமுடைந்த ரத்த தானம் செய்த வாலிபர் எலி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.

அவரை பெற்றேர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரிடம் மேலும் பலர் விசாரணை நடத்தியதால், மன வேதனை அடைந்த அவர் நான் சாகப்போகிறேன் என கூறி தன் உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை கழற்றி வீசினார்.

இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.இதையடுத்து மீண்டும் தற்கொலை முயற்சி செய்யக்கூடும் என்பதால் அந்த வாலிபரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் இன்று கால் இந்த இளைஞர் இன்று காலை திடீரென ரத்த வந்தி எடுத்து மரணமடைந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!