நவ.6ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By Velmurugan s  |  First Published Nov 1, 2024, 4:50 PM IST

வருகின்ற 6ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், சென்னை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் வருகின்ற 6ம் தேதி, புதன் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Tap to resize

Latest Videos

பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!