TVK Maanadu Anchor : தளபதி விஜயின் தமிழக வெற்றிக்கழக தொகுப்பாளராக பணியாற்றிய பெண் குறித்த சில தகவல்கள் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜயின் முதல் அரசியல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டில் உள்ள வி. சாலையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ஒரு புது அரசியல் தலைவர் தமிழக அரசியல் களத்தில் களம் இறங்கி இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக தன்னுடைய முதல் மாநில மாநாட்டின் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் அறிவித்து இருக்கிறார் தளபதி விஜய் என்றால் அது மிகையல்ல. இதுவரை தமிழக மக்கள் கேட்ட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு தோன்றியது தளபதி விஜயின் மாநாட்டு உரை.
ஆவேசமாக பல விஷயங்களை அவர் பேசியிருக்கிறார், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரான முழக்கத்தை அவர் களமிறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் பாஜக கட்சி குறித்து கொஞ்சம் சூசகமாக தாக்கி பேசிய அவர், அதிமுக குறித்து எதுவும் பேசாததால், தங்களுடைய ஆட்சி சிறந்த ஆட்சியாக இருந்திருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அண்மையில் ஒரு பேட்டியில் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
undefined
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் தளபதி விஜயின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. உண்மையில் இந்த மாநாட்டில் பல விஷயங்கள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய துர்கா என்ற பெண், தற்பொழுது தமிழக மக்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்து வருகிறார். தூய தமிழில் சரளமாக கம்பீரக் குரலோடு பேசிய கவிபாரதி துர்கா தேவியின் பேச்சு தான் இப்பொழுது பல இடங்களில் வைரல் ஆகி வருகிறது. அது மட்டும் அல்லாமல் ஒரு சாமானியமான பெண்ணான தன்னை, இவ்வளவு பெரிய மாநாட்டை தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த தளபதி விஜய்க்கு தன்னுடைய நன்றிகளை கூறி ஒரு காணொளியை அவர் வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எத்தனையோ சிறந்த தொகுப்பாளர்கள் இருந்தும், சாமானிய பெண் ஒருவரை விஜய் தன்னுடைய மாநில மாநாட்டை தொகுத்து வழங்க தேர்வு செய்து இருப்பது பலருடைய வரவேற்புகளை பெற்று இருக்கிறது. பொறியில் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் தான் கவிபாரதி துர்கா தேவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பிறந்து வளர்ந்த இவர், தற்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
பல மேடைகளில் கவிதை பாடி வந்த கிராமத்து பெண்ணான இவரை, தளபதி விஜய் தேர்வு செய்திருப்பது மிகப்பெரிய வரவேற்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தளபதியின் மாநில மாநாட்டில் தொகுப்பாளராக பணியாற்றிய பிறகு, தன்னை நோக்கி பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதை எண்ணி கொஞ்சம் வருத்தத்தோடு பேசிய தொகுப்பாளினி துர்கா தேவி, உங்கள் வீட்டு பெண்ணாக உன் குரலாகத்தான் நான் அங்கு ஒழித்தேன். நமது வீட்டில் இருக்கும் சொந்தங்களுக்கும் நாம் எவ்வளவு உறுதுணையாக இருப்போமோ அப்படித்தான் நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் பலர் என்னை கேலி செய்து செய்து வருகின்றனர்.
ஆனால் அதைப்பற்றி நான் எந்த கவலையும் பட போவதில்லை. தளபதி விஜயையே பல விமர்சனங்களை சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவருடைய ரசிகையாக நானும் பல விமர்சனங்களை சந்தித்து தான் மேலே வருவேன் என்று பேசி இருக்கிறார்.
"அண்ணா தந்த ஆயுதம் இது"; மாநாட்டுக்கு பிறகு த.வெ.க தலைவர் விஜய் எழுதிய உருக்கமான கடிதம்!