எங்கள் ஊர் ஜல்லிக்கட்டை நாங்க நடத்திக்கிறோம்...!! மீண்டும் வெடித்தது ஜல்லிக்கட்டு போராட்டம்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2020, 1:43 PM IST
Highlights

தென்கால் பாசன விவசாயிகள் வைத்திருக்கும் கமிட்டியுடன் அவனியாபுரம் கிராம மக்கள் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒருவர் வீதம் கமிட்டியில் சேர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். 
 

உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அவனியாபுரம் கிராம மக்கள் தான் நடத்த வேண்டுமென்று அவனியாபுரம் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் . ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாகவே நடத்தப்பட்டது.  தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்திற்கு பின்பு முதல் ஜல்லிக்கட்டை தென்கால் பாசன விவசாயிகள் ஏற்று நடத்தினார்.  இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்பது அவனியாபுரம் கிராம மக்களால் நடத்தப்படவேண்டும் என்றும் தனி ஒரு சங்கமோ, தனி ஒரு பிரிவினரோ அல்லது தனி நபரால் நடத்தப்படக் கூடாது என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனால் 2019ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்றம் ஏற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.  தற்போது 2020 ஆம் வருடமும் சுமூகமாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த சில தினங்களாக அவனியாபுரம் கிராம மக்கள் மற்றும் தென்கால் பாசன விவசாயிகளை  அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இறுதி பேச்சுவார்த்தையில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் கிராம மக்கள் மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சார்பாக நடத்தப்பட வேண்டும்.  தென்கால் பாசன விவசாயிகள் வைத்திருக்கும் கமிட்டியுடன் அவனியாபுரம் கிராம மக்கள் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒருவர் வீதம் கமிட்டியில் சேர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கணக்குகளை வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிர்வகிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவானது தென்கால் பாசன விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாக கூறி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனைத் தொடர்ந்து இன்று அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக அவனியபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன போராட்டம் அவனியாபுரம் மந்தையில் நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட அவனியாபுரம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பிற்கு 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவனியாபுரம் குவிக்கப்பட்டிருந்தனர்

click me!