நீண்ட நாட்களுக்கு பிறகு நித்யானந்தா இன்று இரவு நேரலையில் தோன்றுகிறார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நித்யானந்தா இந்த பெயரை நாம் எவரும் மறக்க முடியாத அளவுக்கு அவ்வப்போது பேசி வீடியோ வெளியிட்டு மீம் கன்டென்ட் ஆகி வருபவர் என்றே கூறலாம். கைலாசா தீவுக்கு வாருங்கள் என்று கூறி இளைஞர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது.
இந்நிலையில் இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிவிப்பில், ‘ஜூலை 13ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெற இருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன். இந்த குருபூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இதுவாகும்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!
இந்த மூன்று மாத இடைநிறுத்த சமாதியானது அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சிறந்த ஒரு நிகழ்வாகும் . உங்கள் உயிர் இருப்பில் பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவிலை நிர்மாணிக்க அங்கு மனித குடியேற்றத்திற்காக பணிபுரிந்து வரும் நிறுவனங்கள், நாடுகளுடன் இணைந்து கைலாசா வேலை செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !
நீண்ட இடைவேளைக்கு பிறகு குரு பூர்ணிமா நாளில் நித்யானாந்தா மீண்டும் முகநூல் நேரலையில் தோன்ற இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது சீடர்களும் பக்தர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றும் இவருடைய முகநூல் கணக்கை அவருடைய பக்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் பலரும் அவர் என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!