நீட் மசோதா மத்திய அரசுக்கு அனுப்பவில்லையா.? ஆளுநர் மாளிகையில் தான் கிடப்பில் உள்ளதா..! ராஜ்பவனில் புது சர்ச்சை

By Ajmal Khan  |  First Published Jul 13, 2022, 11:30 AM IST

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு கூறிய நிலையில், இன்னமும் ராஜ்பவனில் கிடப்பில் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


நீட் மசோதா நிலை என்ன?

 நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எனவே நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திமுக அரசு பதவியேற்றதும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனையடுத்து அந்த மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிவைத்தார். இதனையடுத்து மீண்டும் கூடிய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா கொண்டு வந்து அனுப்பப்பட்டது. சுமார் 200 நாட்களுக்கு மேல் அளுநர் மாளிகையில் இருந்து மசோதா மே 4 ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்தநிலையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நீட் சட்டம் தொடர்பாக எழுப்பட்ட வினாக்களுக்கு  நேரடியாக பதில் அளிக்க ஆளுனர் மாளிகை மறுத்துள்ளதா கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

உயர் கல்வித்துறையிடம் ஆலோசனை நடத்தாத ஆளுநர்..! பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த தமிழக அரசு- பொன்முடி ஆவேசம்


மத்திய அரசுக்கு அனுப்பவில்லையா?

இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு  நேரடியாக பதில் அளிக்க ஆளுனர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல!  நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுனர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுனரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை  ஆளுனர் மாளிகை தெரிவிக்கவில்லை!

இலவச பயணத்திற்கு இனி தனி பேருந்து.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு !

தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுனர் மாளிகை தெரிவித்ததாக  மே 4-ஆம் தேதி முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுனர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம்  இன்னும் ஆளுனர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது! தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுனர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.  நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்! என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ரயில் வண்டிகளில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு..கட்டணத்தை உயர்த்த திட்டம்.. அலறி துடிக்கும் ராமதாஸ்

 

click me!