நிஜமான மஞ்சும்மல் பாய்ஸுக்கு நீதி கிடைக்கணும்! 18 வருஷம் கழித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு!

By SG BalanFirst Published May 9, 2024, 9:25 AM IST
Highlights

கேரளாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் வி ஷாஜு ஆபிரகாம் அளித்த புகாரின் அடிப்படையில், உள்துறை இணைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கேரள மாநிலத்தின் மஞ்சும்மலைச் சேர்ந்த இளைஞர் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. உதவி கோரிய கேரள சுற்றுலாப் பயணிகளிடம் தமிழக போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. .

கேரளாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் வி ஷாஜு ஆபிரகாம் அளித்த புகாரின் அடிப்படையில், உள்துறை இணைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் சமீபத்தில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட மலையாள திரைப்படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைப் பெற்றது.

காரில் ஏசி பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா? மறக்காம இதை செஞ்சுட்டு ஏசியை ON பண்ணுங்க!

கொடைக்கானலைப் பார்க்க வந்த ஒரு இளம் சுற்றுலாப் பயணி குணா குகையில் சிக்கிக்கொள்வதையும், அவரது நண்பர்கள் கொடைக்கானல் காவல்துறையிடம் உதவி கேட்பதையும் படம் சித்தரித்துக் காட்டுகிறது. இளைஞர்கள் தங்கள் நண்பரைக் காப்பாற்ற உதவி கோரி காவல் நிலையத்திற்குச் செல்கின்றனர்.

அப்போது, அந்த இளைஞர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் சித்தரித்துள்ளது. ஆனால் காவல்துறையினரின் சித்திரவதைச் செயல்களில் கொஞ்சம் மட்டுமே படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உண்மையான அனுபவம் இன்னும் சோகமானது என்றும் ஷாஜு ஆபிரகாம் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.

15 லட்சம் சம்பளம் வேண்டாம்... வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் வெற்றி பெற்ற இளைஞர்!

click me!