அதிமுக சார்பில் ஈ.பி.எஸ். 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்! சுற்றுப்பயணத் தேதிகள் அறிவிப்பு!

By SG BalanFirst Published Mar 21, 2024, 7:23 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயண தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயண தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 24 முதல் 31 வரை மேற்கொள்ளும் முதல் கட்ட சுற்றுப்பயண அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரத்திற்கு காலக்கெடு உள்ள நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி வரை மட்டுமே ஈபிஎஸ் சுற்றுப்பயணத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டாம் கட்டப் பயணத்தில், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,  கரூர், நாமக்கல், நீலகிரி (தனி), கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (தனி), தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

தமிழக பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை, தமிழிசை போட்டி

நாகப்பட்டினம் (தனி), திருவள்ளூர் (தனி), வடசென்னை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி, திருப்பூர், ஆரணி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், ஈரோடு, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், மத்திய சென்னை, சென்னை தெற்கு தொகுதிகளில் பரப்புரை செய்வார் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 24ஆம் தேதி திருச்சி வண்ணாங்கோவிலில் மாலை 4 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இந்தக் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்கூட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாக திமுகவின் முதல் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

தொழிலதிபரை சிப்ஸ் கொடுத்து ஏமாற்றிய ஸ்டெஃப் மிஸ்! ரூ.95 லட்சத்தை அபேஸ் செய்த விர்சுவல் தோழி!

click me!