வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும், ஓ.பி.எஸ்., இபிஎஸ் என இரு தரப்புக்கும் தனித்தனியே சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்ட நிலையில், ஒவ்வொருவரும் தனி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இறுதியாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பன்னீர்செல்வம் நீக்கப்படுவதற்கு முன்னாள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முதன்மை பொறுப்பை வகித்து வந்த நிலையில் தற்போது அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
போட்டியிட்ட 6 முறையும் தோல்வி; 7வது முறையாவது கைகொடுக்குமா தென்காசி? எதிர்பார்ப்பில் கிருஷ்ணசாமி
மேலும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி தொண்டர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர்பேடு உள்ளட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை ஏற்று பன்னீர் செல்வத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல்னா என்ன? நாடாளுமன்ற தேர்தனா என்னனு தெரியுமா? அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இறுதியாக ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அணிகள் பிரிந்த நிலையில், அதிமுக மிகவும் பலவீனப்பட்டு உள்ளது. அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில் அது படுதோல்வியை தழுவும். எனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு இரு தரப்புக்கும் பொது சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் படுதோல்வி அடைவதை தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.