வட தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! எந்தப் பகுதியில் மழைக்கு வாய்ப்பு ? வானிலை மையம் தகவல்

By Ajmal KhanFirst Published Dec 2, 2022, 1:13 PM IST
Highlights

காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி வடதமிழகம்- புதுவை,   மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்போதைய நிலை தொடர்பாகவும் வரும் நாட்களில் அது பயணிக்க கூடிய திசையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன் படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி வடதமிழகம்- புதுவை,   மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.. 2 ஆண்டுகளுக்கு பின் திருவண்ணாமலையில் இன்று மாட வீதியில் தேரோட்டம்..!

மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதி

தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக, 02.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  
03.12.2022:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  
04.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


 மழை அளவு (சென்டிமீட்டரில்):

வேதாரண்யம் (நாகப்பட்டினம்), புதுக்கோட்டை, அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 3, பேராவூரணி (தஞ்சாவூர்), சத்தியார் (மதுரை) தலா 2, மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கார்த்திகை தீபத் திருவிழா! மலை மீது ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி.. என்னென்ன கட்டுப்பாடுகள்.. முழு விவரம்.!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

04.12.2022: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.12.2022: தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாத கால திமுக ஆட்சியே சாட்சி..! ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி
 

click me!