என்னை மட்டும் கொன்றிருக்கலாம் !! என் குழந்தைகள் பாவம்… கதறும் அமிராமியின் கணவர் !!

By Selvanayagam PFirst Published Sep 8, 2018, 9:50 AM IST
Highlights

என்னோட வாழ பிடிக்கலைன்னா அபிராமி போயிட்டே இருந்திருக்கலாம்..அவ தப்பு பண்ணுறான்னு தெரிஞ்சும் என் பிள்ளைகளுக்காக மன்னித்தேன்… அட்லீஸ்ட் அவ என்னை மட்டுமாவது கொன்னுருக்கலாம்… பாவம் அந்த பிஞ்சுக் குழந்தைகளை இப்படி மனசாட்சி இல்லாம கொன்னிருக்காளே என அபிராமியின் கணவர் விஜய் கதறி அழுதுள்ளார்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பணியாற்றி வருகிறார்.

விஜயின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் வேலை கிடைத்ததால் இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு  அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பி ஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர்..அவர்கள் வீடு அருகே உள்ள பிரியாணிக்கடையில் வேலை வார்க்கும் சுந்தரம் என்பருடன் ஏற்பட்ட கள்ளக் காதலேஇதற்கு காரணம் என்பது தெரிய வந்தது.

தற்போது புழல் சிறையில் அபிராமி அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபல நாளேடு ஒன்றில் இருந்து மூன்றாம் கட்டளை பகுதிக்கு சென்று ஒரு டீம் விசாரணை நடத்தியது, அப்போது அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்கள் மனசை உறையச் செய்யும் வகையில் இருந்துள்ளது.

அந்த இரண்டு குழந்தைகளும் அந்த தெருவுக்கே செல்லப் பிள்ளைகளாக இருந்துள்ளனர். கடைக்கு சென்று மகன் அஜய் பொருட்கள் வாங்கும்போது கூட அதிகார தோரணையில் கேட்பானாம். ஆனால் அவன் முகத்தில் மலர்ந்த சிரிப்பு நிலவும் என்றும், ஒவ்வொரு விஷயத்திலும் அஜய் ஷார்ப்பாக இருப்பான் என்றும் கடைக்காரம் ஒருவர் தெரிவித்துள்ளார். அபிராமியைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று ஆத்திரத்தையும் அவர் கொட்டியிருக்கிறார்.

அதே நேரத்தில் அபிராமியில் மேக்கப், உடை போன்றவை வித்தியாசமாக இருக்கும் என்றும், அவரை அந்தத் தெருவில் இருக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. அந்த பிரியாணி கடை சுந்தரம் மட்டுமல்லாமல் வேறு ஒரு ஆணுடனும் அவர் அடிக்கடி வெளியில் சுற்றுவார் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் அபிராமியின் கணவர் விஜய் தங்கமான மனிதர் என்றும், வீட்டில் துணி துவைப்பது முதல் அனைத்து வேலைகளையும் அவரே செய்வார் என்றும் தெரிவித்தனர். ஆனால் அபிராமி எப்போதுமே ஊர் சுற்றிக் கொண்டிருப்பார் என்றும், சில நேரங்களில் குழந்தைகள் இருவரையும் வீட்டுக்குள் அடைத்து பூட்டி விட்டு சென்று விடுவார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.

அந்த குழந்தைகளை கொன்னதற்குப் பதில் அவள் விட்டுவிட்டு ஓடியிருந்தால்கூட நாங்கள் தத்து எடுத்து வளர்த்திருபோம் என்று விஜய் வாடகைக்கு இருந்தத ஹவுஸ் ஓனர் தெரிவித்தார்.

இறுதியில் விஜயை சந்தித்தபோது அழுகையுடன் பேசினார். எனக்கு பெற்றோர் இல்லை, எனது குழந்தைகளைத்தான் பெற்றோராக நினைத்திருந்தேன். என்னோட வாழ பிடிக்கலைன்னா அபிராமி போயிட்டே இருந்திருக்கலாம்..அவ தப்பு பண்ணுறான்னு தெரிஞ்சும் என் பிள்ளைகளுக்காக மன்னித்தேன்… அட்லீஸ்ட் அவ என்னை மட்டுமாவது கொன்னுருக்கலாம்… பாவம் அந்த பிஞ்சுக் குழந்தைகளை இப்படி மனசாட்சி இல்லாம கொன்னிருக்காளே என அபிராமியின் கணவர் விஜய் கதறி அழுதுள்ளார்.

தினமும் நான் வேலைக்குப் போகும் போதுஅந்தக் கழந்தைகள் என்னை கொஞ்சுவது எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்று கூறி கதறி அழுதுள்ளார். தனது தாய் தானே பால் கொடுக்கிறார்,  என நம்பித்தானே அந்தக் குழந்தைகள் இரண்டும் அபிராமி கொடுத்த விஷ பாலை அருந்தியிருப்பார்கள்…அந்தக்  குழந்தைகளுக்கு எப்படி துரோகம் பண்ண மனசு வந்ததது என அப்பகுதி மக்கள் ஆத்திரத்துடன் அழுது புலம்புகின்றனர்.

ஆடம்பர வாழ்க்கை, மனம் போல வாழ்வு என தறிகெட்டுத் திரிந்த அபிராமி தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார். அவரது கள்ளக் காதலால் இரு பிஞ்சுக் குழந்தைகளும் கொல்லப்பட்டு விட்டனர். கணவர் உடைந்து போய் இன்று அநாதையாக இருக்கிறார். தற்போது ஒரு குடும்பமே சிதைந்து போனது.

click me!