
தமிழ் மாதமான ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை ஆடி வெள்ளி என்று குறிப்பிடுவர். இந்நாளில் பெண் தெய்வமான சக்தி தேவிக்கு உகந்த நாளாக பாரக்கப்படுகிறது. மேலும் பருவமழையின் தொடக்கத்தையும் நீர் தெய்வங்களின் சக்தியைக் குறிக்கிறது. ஆடி மாதம் ஆன்மீக முன்னேற்றத்திற்காக தேவியை வழிபட உகந்ததாகும். இம்மாதத்தில் திருமணம் மற்றும் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.
மேலும் படிக்க:Budhan Peyarchi 2022: ஆகஸ்ட் 09ல் நிகழும் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு வாழ்கை அமோகமான இருக்கும்...
இந்த நிலையில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, தமிழகத்தில் ஏராளமான கோவில்களில் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக 500 கிலோ பச்சை மஞ்சளை 51 அம்மிக்கல் வைக்கப்பட்டு பெண் பக்தர்கள் அரைத்தனர். ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமை அம்மனுக்கு பச்சை மஞ்சள் பூசி அபிஷேகம் செய்து அம்மனை குளிர்வித்தால் விவசாயம் செழிக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் இன்று 51 அம்மிக்கல் வைக்கப்பட்டு அதில் பெண்கள் 500 கிலோ பச்சை மஞ்சளை அரைத்தனர்.மேலும் இந்த மஞ்சளை அம்மனுக்கு பூசி அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
மேலும் படிக்க:Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால்...ஆகஸ்ட் 10 வரை இந்த மூன்று ராசிகளுக்கு இரட்டிப்பு ராஜயோகம்...