அடுத்த அதிர்ச்சி தகவல்.. மின் மீட்டருக்கு மாத வாடகை.. புதிய இணைப்பு பெறும் கட்டணம் உயர்வு..

Published : Jul 22, 2022, 04:55 PM IST
அடுத்த அதிர்ச்சி தகவல்.. மின் மீட்டருக்கு மாத வாடகை.. புதிய இணைப்பு பெறும் கட்டணம் உயர்வு..

சுருக்கம்

வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மீட்டருக்கும் மாத வாடகையை வசூலிக்க தமிழக மின்சார வாரியம்  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு அறிப்பி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மின் மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மீட்டருக்கும் மாத வாடகையை வசூலிக்க தமிழக மின்சார வாரியம்  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மின் மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:அட கடவுளே! புடவைக்காக அக்காவுடன் சண்டை போட்டதால் கல்லூரி மாணவி ரயில் பாய்ந்து தற்கொலை? வெளியான அதிர்ச்சி தகவல்

வீடுகளில் மின்‌ பயன்பாட்டை அளவிடப்‌ பயன்படும்‌ மின்‌ மீட்டருக்கு மாதந்தோறும்‌ ரூ.60 மின் கட்டணம் வசூலிக்கவும் அதன்படி இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ.120 மின்‌ மீட்டருக்கான வாடகையாக வசூலிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்‌ மின்சார வாரியம்‌ அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்குமாயின், வரும் செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 120 ரூபாயை மின்‌ மீட்டருக்கான வாடகையாக செலுத்தும்‌ நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டணமானது, டிஜிட்டல்‌ மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை பொருத்தவும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு மாத வாடகையாக ரூ.350 வசூலிக்கவும்‌ திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர்களை தங்களது மின் மீட்டரை, சொந்த பணத்தில் விலைக் கொடுத்து  வாங்கி இருந்தால், வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் மின் மீட்டர்களை சேதம் அல்லது வேறு காரணகளுக்காக மாற்றினாலும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றினாலும் அதற்கான வசூலிக்கப்படும் பணிகளுக்கான கட்டணத்தை 100 சதவீதம்‌ உயர்த்திக்‌ கொள்ளவும்‌ தமிழ்நாடு மின்‌ வாரியம்‌ அனுமதி கேட்டுள்ளது. 

மேலும் படிக்க:கடலுக்கு நடுவில் 134 அடி உயரத்தில் பேனா... மெரினாவில் தந்தைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்

தற்போது, புதிதாக மின்‌ மீட்டரை மாற்றுவதற்கும்  வேறு இடத்தில்‌ மாற்றுவதற்கும் தற்போது வசூக்கப்பட்டு வரும் ரூ.500 ஆனது சிங்கிள்‌ பேஸ்‌ எனப்படும்‌ ஒரு முனை மின்சார இணைப்புக்‌ கொண்ட வாடிக்கையாளர்களுக்கு‌ ரூ.1000 ஆகவும், மும்முனை மின்சார இணைப்புக்‌ கொண்டவர்களுக்கு ரூ.750 ஆக வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.1,500 ஆக உயர்த்திக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 11 December 2025: 15ம் தேதி முதல் விருப்ப மனு பெறலாம்.. அதிமுக அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!