சொந்த மனைவியை ஆபாச வீடியோ எடுத்து  மிரட்டும் "பிரபல மருத்துவர்"...! டாக்டர் கணவர் டாக்டர் மனைவியை மிரட்ட பகீர் காரணம் இதோ..?!

First Published Jun 5, 2018, 2:01 PM IST
Highlights
A DOCTOR covered his wife naked video


சொந்த மனைவியை ஆபாச வீடியோ எடுத்து  மிரட்டும் பிரபல மருத்துவர்...! டாக்டர் கணவர் டாக்டர் மனைவியை மிரட்டும் பகீர் காரணம்..?!

தன் சொந்த மனைவியை ஆபாச வீடுயோ எடுத்து மிரட்டம்  மருத்துவ கணவர் மீது  புகார் கொடுத்துள்ளார் அவரது மனைவி..

இந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர்  சென்னையில் அரசு மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவி ஒரு மருத்துவர். இவர் கோவை அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறார். இவர் தற்போது சேலம் மாநகர போலிஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

 "அதில் சேலத்தில் எனக்கு சொந்தமான் வீடு உள்ளது..அந்த வீட்டை அவரது  பெயருக்கு மாற்ற வேண்டும் என்றும், விவாகரத்து கோரியும் மிரட்டல் கொடுத்து வருகிறார்..இதற்கு முன்னதாக என்னை ஆபாச  வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்.... நான் அவர் பெயருக்கு வீட்டை எழுதிக்கொடுக்க வில்லை என்றால், இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டியதால், வீட்டை அவர் பெயருக்கு மாற்றி கொடுத்து விட்டேன்..விவாகரத்தும் கொடுத்து விட்டேன்....

இந்நிலையில் மீண்டும், இந்த வீடியோவை வெளியில் விடாமல் இருக்க வேண்டும் என்றால்,10  லட்சம் ரூபாய்  கொடு என  கேட்கிறார்....நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை".. என  குறிப்பிட்டு உள்ளார்

பெண் மருத்துவரின் இந்த பகீரங்க புகாரால், மருத்துவ கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ கணவர் மாயமாகி உள்ளார்... அவரை போலீசார் நான்கு பக்கமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

click me!