போராட்டத்தை அறிவித்தது மணல் லாரி உரிமையாளர் சங்கம்..! மக்கள் யாரும் "அன்றைய தினம்" வாகனத்தை இயக்க வேண்டாம் என வேண்டுகோள்..!

First Published Jul 6, 2018, 4:12 PM IST
Highlights
a date anounced for protest due to diesel and gst problem


சாலை சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக பண வசூல் செய்வதாக மணல் லாரி உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளது. 

நெடுஞ்சாலையில் உள்ள  சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக பண வசூல் செய்யப்படுவதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யுவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை-திண்டிவனம் சாலையை 6 வழியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னை-வாலாஜா வரை 8 வழிச்சாலை அமைக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் யுவராஜ், அவர்கள் மேற்கொள்ள உள்ள போராட்டத்திற்கு  மக்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தது உள்ளார்.

வருகிற ஜூலை 20 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், பின்னர் 22  ஆம் தேதி மக்கள் யாரும் வாகனங்களை இயக்காமல் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆதரவு  தர வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டு உள்ளார். 

click me!