தேர்தல் பிரச்சாரம் இரவு 10மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்ற உத்தரவு உள்ள நிலையில், இரவு 10.40 மணியை தாண்டியும் அண்ணாமலை பிரச்சாரம் செய்த்தாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விதிமுறைகளை மீறி பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தேர்தல் ஆணையமும் பிரச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு 10மணிக்கு பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. இந்தநிலையில், இந்தநிலையில், கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது இரவு 10 மணியை தாண்டியும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்துள்ளார். இது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு முறையிட்டனர். இரவு 10.40 வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுத்தது ஏன என கேள்வி எழுப்பினர்.
இரவிலும் பிரச்சாரம்
அப்போது அங்கிருந்த பாஜகவினர் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை அடித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அண்ணாமலை அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார். பாஜகவினர் தாக்கியதில் 7 பேர் பலத்த காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பீளமேடு காவல்நிலையத்தில் பாஜகவினர் மீது திமுகவினர் புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவரும் கோயமுத்தூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவினர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10:39 மணி அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அண்ணாமலை மீது வழக்கு பதிவு
இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைய விதி உள்ள நிலையில் 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
என்னை கண்டால் பிரதமர் மோடி பயப்படுவார்; பிரசாரத்தில் ஆ.ராசா பரபரப்பு பேச்சு